சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ. அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
சென்னை, அக்.25 மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று (24.10.2020) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு வீர முழக்க மிட்டார்.
பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடி களையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும், வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மய்ய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தின் அருகே கட்சியின் தலைவர் எழுச்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திருமாவளவன் வீரமுழக்கமிட்டார். அது போல் சேலம் ஆட்சியர் அலுவலகம், அரக் கோணம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது ஜாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. மனுஸ்மிருதி மனிதகுல விரோத கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. தற் போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப் படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரண மாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன.
இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதனை கண்டித்தும் மனுநூலைத் தடைசெய்ய வலியுறுத் தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி, கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ. மதிவதனி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தென் சென்னை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, பெரியார் சமூககாப்பு மாநில அமைப் பாளர் சோ. சுரேஷ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், ஆவடி இளை ஞரணி தலைவர் கார்வேந்தன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு. அன்புச்செல்வன், அரும்பாக்கம் தாமோதரன், வாசு, அம்பத்தூர் ராமலிங்கம், அஜெந்தா, தங்கமணி, அன்புச்செல்வி, ஆவடி தமிழ்மணி, சுகந்தி, இனியன், நன்னன், முத்து, க. ஸ்டீபன், பவன்குமார், பழ. முத்துக்குமார், சவுமியா, வெங்கடேசன், வை. கலையரசன், க. கலைமணி, ஆவடிமாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், புகைப்பட கலைஞர் சிவகுமார், பிரகாசு, பவானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழர் தலைவரது ஆணைக்கிணங்க, மனுதர்மத்தைத் தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய போராட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர் (24.10.2020)
No comments:
Post a Comment