கரூர் மாவட்டம் கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட செவ்வந்தி பாளையத்தில் பெரியார் பெருந் தொண்டர் வீ கருப்பையா (வயது 93) அக்டோ பர் 6ஆம் தேதி மறைந்தார். அவர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். செவ்வந்திப் பாளையத்தில் கிளைக் கழகம் தொடங்கி தந்தை பெரியாரை அழைத்து அலுவலகம் துவங்கியவர். அவருக்கு துணைவியார் சுந்தரி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவு செய்தி தாமதமாக தெரிந்ததால் 18ஆம் தேதி கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குமாரசாமி. மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், செயலாளர் ஜெகநாதன், அமைப் பாளர் ராஜா ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment