பாகூர்,அக்.27 மத்திய அரசுடன் சேர்ந்து புதுவையின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கிருமாம்பாக்கத்தில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாண விகள் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இலவச அரிசி கொடுக் கப்படுகிறது. புதுவையில் மட்டும் அரிசி தர வேண்டாம் என ஆளுநர் தடுக்கிறார். மத்திய அரசுடன் சேர்ந்து ஆளுநர் புதுவையின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக் கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் புதுவையில் எதிர்க்கட்சி செயல் படாமல், எதிரி கட்சியாக இருக் கிறது. எதைப் பற்றியும் கவலைப் படாமல் மவுனம் காக்கிறார்கள். எங்கள் மீதான குறைகளை நேர டியாக கேளுங்கள். அதை விடுத்து, அரசின் திட்டங்களை முடக்குவது நியாயமற்றது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம், மீண்டும் காங் கிரஸ் ஆட்சியில் தான் முடிக்கப்படும் என்பது சரித்திரமாக இருந்து வருகிறது. மின்துறையில் பொறி யாளர் பணியிடம், எல்.டி.சி., 30 சப்-இன்ஸ்பெக்டர், 500 காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது. வேலை வாய்ப்பு தொடர்பான கோப்புகளுக்கு ஒப் புதல் அளிக்காமல் ஆளுநர் முடக்கி வருகிறார்.
இப்படி ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏரி சங்கம் மூலமாக புகார் தெரிவிக்க வைத்து, குடிநீர் திட்டங்களை ஆளுநர் தடுத்து நிறுத்தி உள்ளார். தற்போது மத்திய அரசு குடிநீர், விவசாயத்துக்கு எங்கு வேண்டுமா னாலும் தண்ணீர் எடுத்துக் கொள் ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது ஆளுநர் என்ன செய்யப் போகிறார்? புதுவையின் வளர்ச்சி விகிதம் 9 சதவீதம், மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 1 சதவீத மாக உள்ளது. புதுவையில் பல தடைகளை மீறி மக்களின் ஒத்து ழைப்புடன் ஆட்சி செய்து வருகி றோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment