மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதில் தமிழக அரசு மேல் முறையீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 18, 2020

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதில் தமிழக அரசு மேல் முறையீடு

உச்சநீதிமன்றத்தில் விசாரணை


புதுடில்லி, நவ. 18- மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் மேல் முறை யீட்டு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், ஹேமந்த் குப்தா,  அஜய் ரஸ் தோகி அமர்வில் 17.11.2020 அன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் நாகமுத்து,  வழக்கு ரைஞர் ரகுநாத சேதுபதி, ‘‘இந்த வழக்கு நீண்ட  காலமாக நிலு வையில் உள்ளது. ஆயிரக்க ணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரம் இதில் அடங் கியுள்ளது.’’ என வாதிட்டனர்.  தமிழக அரசு தரப்பில்  ஆஜ ரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி,”இந்த வழக் கில் விரிவான விசாரணை தேவை. பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப்பணியாளர் களுக்கு உடனடியாக தற் போது நிவாரணம் வழங்கு வது என்பது சாத்தியம் இல்லை’’ என்றார். இவ்வழக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment