மின்சார இரயிலில் அனைத்து பெண்களும் பயணிக்க அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 23, 2020

மின்சார இரயிலில் அனைத்து பெண்களும் பயணிக்க அனுமதி

சென்னை, நவ. 23-- தெற்கு இரயில்வே வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு இரயில்வே தினசரி 244 சென்னை புறநகர் சிறப்பு மின்சார இரயில்களை இயக்கி வருகிறது.


இது கரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட இரயில்களில் ஏறக் குறைய 40விழுக்காடு இயக்கி வருகிறது. தற்போது இன்று (23.11.2020) முதல் அத்தியாவசியப் பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகளை சாதாரண நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக் கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாள்முழுவதும்  பயணிக்க இரயில்வே நிர்வாகம் அனுமதியளிக் கிறது.


சாதாரண நேரங்கள் என்பது காலை 7 வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாலை 7.30 மணிக்கு பிற்பாடு உள்ள நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதா ரண பயணச்சீட்டு மூலம் பெண் பயணி கள் சிறப்பு இரயிலில் பயணிக்கலாம். அத்தியாவசியப் பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், திங்கட்கிழமை முதல் சனிக் கிழமை வரை  பயணிக்க அனுமதி இல்லை.


No comments:

Post a Comment