கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 5, 2020

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

சென்னை,நவ.5 தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு   3.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்ட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசியதாவது:- கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்காக 4 நாள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.  மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப் பிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.


 


இந்தியாவின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி


புதுடெல்லி, நவ.5 கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தி யாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும்.


கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும். பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


இதுபோல், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம்வரை இந்தியாவின் ஏற்றுமதி 15 ஆயிரத்து 7 கோடி டாலராக பதிவாகி உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 19.05 சதவீதம் குறைவாகும். கடந்த மாதம் இறக்குமதியும் 11.56 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.


 


 


No comments:

Post a Comment