செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 7, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘மோப்ப' சக்தி!


பாகிஸ்தானில் ஹிந்து குடும்பங்களை ஒரு கும்பல் தாக்க முற்பட்டபோது, ஹிந்துக்களைக் காப்பாற்றிய முஸ்லிம்கள் - திரும்பிப் பார்க்கச் செய்தது.


குளிர் சாதனப் பெட்டியில் (ஃப்ரிட்ஜ்) பசு மாமிசம் இருக்கிறதா என்று மோப்பம் பிடிக்கும் ஹிந்துத்துவாவாதிகள் போல் இல்லாமல், மனிதநேயம் காப்பாற்றப்பட்டது பாராட்டத்தக்கது.


காதலுக்கு அபராதமாம்!


வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இணையருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு - இருவர் கைது.


காதல் என்பது உயிர் இயற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ! என்றார் புரட்சிக்கவிஞர்.


மிகப்பெரிய எச்சரிக்கை


சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கரோனா தொற்று உறுதியாயிற்று.


சகலப் பாதுகாப்புடன் இருக்கும் தலைமை நீதிபதிக்கே இந்நிலை - மேலும் கூடுதல் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்கவேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது. தலைமை நீதிபதி நலம் பெறட்டும்!


காலங்கடந்தது!


பா.ஜ.க. கூட்டணியால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது: - நிலோபர் கபீர், தமிழக அமைச்சர்.


காலங்கடந்த ஞானோதயம்!


விநாயகரைப் படுத்தாத பாடா?


இந்து கடவுள் படம் போட்ட பட்டாசுகளை விற்பதா? மத்திய பிரதேசத்தில் இந்துத்துவா அமைப்பினர் முசுலீம் கடைக்காரர்களிடம் பிரச்சினை.


அது என்ன முஸ்லிம் கடைக்காரர்களிடம் மட்டும்? எல்லாக் கடைகளிலும்தான் மிக நீண்ட காலமாக லட்சுமி வெடிகள் விற்கப்பட்டும், வெடிக்கப்பட்டும்தான் வருகின்றன.


திருமூர்த்தி சுருட்டுகள் உண்டே! இவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி என்ற பெயரால் விநாயகன் பொம்மைகளை தண்ணீருக்குள் மூழ்கடித்து சின்னாபின்னப்படுத்தும் காட்சி, கொஞ்சமா, நஞ்சமா?


சர்ச்சைப் பேச்சு


தேவையற்ற ஒன்று!


ஏழு பேர் விடுதலைபற்றிப் பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை: - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


இந்தக் காலகட்டத்தில் இது போன்ற சர்ச்சைகளை எழுப்புவது முதலமைச்சருக்கு அழகல்ல. ஆளுநருக்கு ஆளும் தரப்பில் அழுத்தத்தைக் கொடுக்கும் கடமையைச் செய்வதுதான் உத்தமம்!


பக்தி ஒரு பிசினஸ்!


சபரிமலை பிரசாதம் அஞ்சல்மூலம் அனுப்ப ஏற்பாடு!


பக்தி - ஒரு பிசினஸ் என்று சும்மாவா சொன்னார் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி?


‘உள்டாப்தான்!'


திரைப்படத்தில் சிம்பு பிடித்தது பிளாஸ்டிக் பாம்புதான்: - வனத்துறைக்குப் பட இயக்குநர் பதில்.


திரைப்படத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் - நூறு பேரை ஒற்றை ஆளாக இருந்து கதாநாயகன் அடித்து வீழ்த்துவது எல்லாமே இதுபோன்ற செயற்கை 'உள்டாப்'தான் என்பது தெரியாதா?


No comments:

Post a Comment