கருநாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 22, 2020

கருநாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கரோனா தொற்று

                                        பெங்களூரு, நவ. 22- கருநாடகா வில் கல்லூரிகள் திறக்கப்பட்ட 4 நாளில் 81 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இதன் காரண மாக ஆசிரியர்கள், பொது மக்களிடையே மீண்டும் கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.


நாடுமுழுவதும் கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங் கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதற்கி டையில், பொதுமுடக்கத்தில் மத்தியஅரசு அளித்துள்ள தளர்வுகள் காரணமாக, பள் ளிக்கல்லூரிகள் திறக்க கட் டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி களில் இறுதியாண்டு மாணாக் கர்கள் வர பல மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டது.


அதன்படி  கருநாடகா மாநிலத்திலும் கடந்த 17-ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல் பட உத்தரவிடப்பட்டது.  அதை யடுத்து, அங்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. கரோனா தடுப்பு வழிமுறை களை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டு, கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, கடந்த 4 நாட்களில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை பரிசோதித்ததில்,  81 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கருநாடகா மாநிலத்தில் நேற்று மாலை நிலவரப்படி  8,69,561 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 11,621 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 24,752 பேர் சிகிச்சையில்  இருப் பதாகவும் அம்மாநில சுகாதா ரத்துறை தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment