ஒற்றைப் பத்தி - ‘ஸ்ட்ராங் டோஸ்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 12, 2020

ஒற்றைப் பத்தி - ‘ஸ்ட்ராங் டோஸ்!'

‘‘அந்தக் காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் களுக்கு மிகவும் வேண்டிய வனாகத் தானிருந்தேன்; என்னை நிரம்பவும் மதிப்பார் கள். காரணம், நான் எல்லாப் பதவிகளிலும் இருந்து வந்த வன். திரு. இராசகோபாலாச்சாரி யார் வந்து, “சமுதாய சீர் திருத்தம்தான் நமக்கு வேண்டும்; அது காந்தி யால்தான் முடியும்'' என்று சொல்லி, என்னை காந்திக்கு சிஷ்ய னாக்கினார். நானும் ஈரோடு நகர மன்ற சேர்மன் பதவியை ராஜிநாமா செய்து வெளியேறி காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். சென்ற பிறகு தமிழன் ஒருவருக்குக்கூடக் கிடைத்திராத - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர், தலைவர் இடத்தில் என்னை உட்கார வைத்தார்கள்.


ஏனென்றால், திரு.வி.க. சாதாரண ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து வந்தவர். டாக்டர் வரதராஜுலு அவர் கள் ‘பிரபஞ்சமித்திரன்' என்ற வாரப் பத்திரிகை நடத்தி வந்தவர்; என்றாலும் பார்ப் பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றி விடலாம் என்று அவர் களுக்குத் தெரியும். வ.உ. சிதம்பரனார் ஒருவர்; அவர் பாவம்! எல்லாவற்றையும் விட்டு நொந்துபோய் கஸ்தூரி ரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். ‘அதனால் சிறிது வசதியுள்ளவன் - பெரிய வியாபாரி - பல பதவிகளை விட்டு வந்தவன்' என்கிற முறையில் இராசகோபாலாச் சாரியார் என்னைத்தான் நம்பி மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார், எதற்கும்!


உண்மையாகவே நானும் அதை நம்பி, அவரிடம் மிக விசுவாசமாய் இருந்து, பெரிய பிரச்சாரம் செய்து, பார்ப் பனருக்கு மேடை தேடிக் கொடுத்துவிட்டோம்! அப் போதே நான், ‘நாம் தொட்டால் தீட்டுப்பட்டு விடும் என்கிற சாமி நமக்கெதற்கு? அதை யெடுத்து ரோடுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற் றிலே தூக்கிப் போட்டு வேட்டி துவைக்கப் போடணும்' என்று பேசுவேன். டாக்டர் வரத ராஜுலு, கலியாணசுந்தரனார், சிதம்பரனார், நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத்தான் முன்னே தள் ளுவார்கள்; என்னைப் பார்த்து பதவிவேட்டைக் காரன் என்று எவரும் சொல்ல முடியாதென்பதால் - பார்ப்ப னர்களும் நான் என்ன சொன் னாலும் வாயை மூடிக்கொண் டிருப்பார்கள்.


ஜாதி, மதம், கடவுள் துறை யில் இப்பொழுது சொல்லு வதெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவார், ‘நாயக்கர்! உங் களுடையது ரொம்ப ‘ஷிtக்ஷீஷீஸீரீ பீஷீsமீ' என்று. நான் சொல்லுவேன். ‘இந்த மடப் பசங்களுக்கு ஷிtக்ஷீஷீஸீரீ என்ன? லேசு என்ன?' என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன்.''


- தந்தை பெரியார்


(‘விடுதலை' 9.1..1959)


தந்தை பெரியார் தனனை ஓர் அறுவைச் சிகிச்சை மருத் துவர் என்று சொல்லுவது இப்பொழுது புரிகிறதா?


 - மயிலாடன்


No comments:

Post a Comment