நினைவாற்றல் மிக்க சிறுவனுக்கு சாதனையாளர் புத்தகத்தில் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 20, 2020

நினைவாற்றல் மிக்க சிறுவனுக்கு சாதனையாளர் புத்தகத்தில் இடம்


ஆண்டிப்பட்டி, நவ. 20- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவன் மாணிக் கம். அவருடைய மனைவி திவ்யா. இந்த தம்பதியின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா (வயது 2லு). ஜீவன்மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். திவ்யா மற்றும் ரினேஷ் ஆதித்யா ஆகியோர் ஆண்டிப்பட்டியில் வசித்து வருகின்றனர்.


சிறுவன் ரினேஷ் ஆதித்யா, அபார ஞாபக சக்தி உடைய வன் என்பதை அவருடைய பெற்றோர் அறிந்தனர். இத னையடுத்து தேசிய கொடி களின் மூலம் நாடுகளின் பெயர்களை கூறுதல், இந்திய நாட்டின் தற்போதைய மத் திய அமைச்சர்களின் பெயர் கள், உலக நாடுகளின் புகழ் பெற்ற பெற்ற விமானங்களின் பெயர்கள், பல்வேறு நாடுக ளின் அதிபர்கள், பிரதமர்க ளின் பெயர்கள், ‘லோகோ’ மூலம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறுதல் தொடர் பாக அவனுக்கு பெற்றோர் பயிற்சி அளித்தனர்.


பெற்றோர் அளித்த பயிற் சியை அப்படியே உள்வாங்கி கொண்ட சிறுவன் ரினேஷ் ஆதித்யா, தான் கற்றதை அபாரமாக வெளிப்படுத்தி அசத்தி வருகிறான். தேசிய கொடியை காட்டினால், அந்த நாட்டை உலக வரை படத்தில் காட்டி வியக்க வைக்கிறான். மேலும் பல நிறு வனங்களின் முத்திரையை சரியாக கூறி வருகிறான்.


இரண்டரை வயது சிறு வனின் அசாத்திய தனித் திறமை காரணமாக, இந்திய சாதனையாளர்கள் புத்தகத் தில் அவன் இடம் பெற்றுள் ளான். மேலும் கலாம் விஷன் இந்தியா-2020 சான்றிதழ் களை பெற்றுள்ளான். சாதனை படைத்த சிறுவனை, தேனி மாவட்ட ஆட்சியளர் பல்லவி பல்தேவ் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழை வழங் கினார். இதேபோல் அந்த சிறுவனின் தனித்திறனை ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர்.


No comments:

Post a Comment