மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 17, 2020

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


சென்னை, நவ. 17- தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டி யலை சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் 16.11.2020 அன்று வெளியிட்டார். பின் னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:


நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண் ணப்பித்துள்ளனர். இந் தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாண வர்கள் 405 பேருக்கு மருத் துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் சிறீஜன் முத லிடம் பிடித்தார். நாமக் கல்லை சேர்ந்த மோகனப் பிரபா 705 மதிப்பெண்களு டன் இரண்டாவது இடம் பிடித்தார். சென்னை அயனம் பாக்கம் வேலம்மாள் வித்யா லயா பள்ளி மாணவி சுவேதா 701 மார்க்குடன் 3ஆம் இடம் பிடித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் ஒதுக்கீட்டில் தேனி சில்வார் பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முத லிடம் பிடித்தார். சென்னை யில் உள்ள நேரு உள் விளை யாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 18ஆம் தேதி முதல் மருத்துவப் படிப் புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் முத லில் சிறப்பு பிரிவு மாணவர்க ளுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது.


No comments:

Post a Comment