திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 22, 2020

திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது


நாகை, நவ. 22- சட்டமன்ற தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 20.11.2020 அன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.


அதன்படி, திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டா லினை காவல்துறையினர் கைது செய்த னர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். கைது செய்தாலும் திமுகவின் பிரச்சார பயணம் தொடரும் என்றும், திமுகவின் பிரச்சாரத்தை தடுக்க அரசு முயற்சிப்பதாகவும் உதய நிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டா லினை விடுவிக்கக்கோரி தமிழகம் முழு வதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த திமுக இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டா லினை காவல்துறையினர் விடுதலை செய்தனர். உதயநிதியின் பிரச்சார பய ணம் திட்டமிட்டபடி தொடரும் என் றும் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருப்பதாக சந்தேகம் உள்ள தாக தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment