இந்திய அடையாள மொழி பட்டயப்படிப்பு செவித் திறனற்ற மாணவர்களை மட்டுமே அனுமதித்து புதிய பட்டியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 20, 2020

இந்திய அடையாள மொழி பட்டயப்படிப்பு செவித் திறனற்ற மாணவர்களை மட்டுமே அனுமதித்து புதிய பட்டியல்

புதுடில்லி, நவ. 20- மத்திய அரசின் இந்திய மறுவாழ்வு கவுன்சில், இந்திய அடையாள மொழிபோதனைப் பட்டயம் (DTISL-Diploma inTeachingIndian Sign Language) பாடப்பிரிவிற்கு செவித் திறன் குறைபாடு உடைய மாணவர்கள் மட் டுமே விண்ணப்பிப்பதற்கே தகுதி படைத்தவர்கள் என்ற நிலை இருக்கையில், பொதுப் பட்டியலில் உள்ள ஊனமுற்ற மாணவர்கள் அந்தப் பாடப் பிரிவிற்கு தேர்வு செய்யப்பட் டிருந்ததை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலா ளர் முரளிதரன் சுட்டிக்காட்டி, மத்திய சமூகநீதி மற்றும் அதி காரமளித்திடும் அமைச்சகத் தின் கீழ்இயங்கிடும் ஊனமுற் றோருக்கு அதிகாரமளித்தி டும் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


இதனை அடுத்து, இந்திய மறுவாழ்வு கவுன்சில் சார்பில் வெளியாகும் இணையதளத் தில் 2020 நவம்பர் 16 தேதி யன்று ஒருசுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் முரளிதரன் சுட்டிக்காட்டிய தவறு ஒப்புக்கொள்ளப்பட்டு, தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், செவித் திறன் குறைபாடு உடைய விண் ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்படும் என் றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.


இதனை வரவேற்றுள்ள முரளிதரன் அதே சமயத்தில், இவ்வாறு புதிய பட்டியல் வெளியிடும் சமயத்தில் அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், ஊனமுற் றோர் பொதுப்பட்டியல் மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந் தால் அவர்களுக்கு பொதுப் பட்டியலிலேயே இடம் அளித் திட வேண்டும் என்றும், அந்த வகையில் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் என் றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment