பா.ஜ.க.வின் ஒழுக்கம் இதுதானா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 25, 2020

பா.ஜ.க.வின் ஒழுக்கம் இதுதானா

பா.ஜ.க.வின் ஒழுக்கம் இதுதானா?


விபச்சாரத் தொழில் நடத்தும் பா.ஜ.க. பிரமுகர் கைது


சென்னை, நவ. 25 சென்னையில் 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடு படுத்தியதாக வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு (வயது 22), மதன்குமார் (35), அவரது தாய் செல்வி (50), தங்கை சத்யா (23) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இதுபோல் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடு படுத்தியது தெரிந்தது.


இந்த வழக்கில் கார்த்திக் (25), மகேஸ்வரி (29), வனிதா (35), ஈஸ்வரி (19), விஜயா (45), திலீப் (25) உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை அனைத்து மகளிர் காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கில் கைதான சத்யா கொடுத்த தகவலின் பேரில் புது வண்ணை நகர் சேர்ந்த தரகர் ராஜேந் திரன் (44) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதும், பல்வேறு உயர்அதிகாரிகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்ததும், இதேபோல் எண்ணூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்திக்கும் அந்த 15 வயது சிறு மியை பாலியலுக்கு அனுப்பி வைத்த தாகவும் தெரிவித்தார்.  இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப் பட்டார்.  மேலும் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட் டார். விபசார தரகர் ராஜேந்திரனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment