தமிழக சட்டப்பேரவைக்கு திட்டமிட்டப்படி தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 19, 2020

தமிழக சட்டப்பேரவைக்கு திட்டமிட்டப்படி தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

புதுடில்லி, நவ. 19- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டில்லியில் நேற்று (18.11.2020) செய்தியாளர்களி டம் கூறியதாவது:


பீகார் தேர்தலை நடத்த நாங்கள் தயாரான போது, தேவையின்றி ஆபத்தை தேடிச் செல்வதாக சிலர் விமர்சித்தனர். ஆனால், பாது காப்புடன், வெற்றிகரமாக மாபெரும் ஜனநாயக நடை முறையை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். ஒவ்வொரு தேர்தலுக்கு தேர்தல் ஆணை யம் கடின உழைப்பை தந்து வருகிறது. இம்முறை கரோனா தொற்றுநோய் சவாலையும் முறியடிக்க வேண்டியிருந்த தால் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டோம்.


பீகார் தேர்தலை வெற்றி கரமாக நடத்தி முடித்ததால் எங்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது. இதே புத் துணர்ச்சியுடன் நாங்கள் ஓய்வு எடுக்கப் போவதில்லை. அடுத்தகட்டமாக நடத்தப் பட வேண்டிய  தேர்தல்களை யும் நிர்ணயிக்கப்பட்ட தேதி களில் நடத்தி முடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை இப் போதே தொடங்கி விட் டோம். எனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிய உள்ளது. அதற்குள் ளாக நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை நடத்தி முடிப் பேன். இவ்வாறு அவர் கூறி னார். பீகாரைத் தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் மே, ஜூன் மாதங்களில் நடத் தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment