குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 24, 2020

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்

பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு



புதுடில்லி, நவ. 24-  விவசாயிக ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத் திய அரசு பொய்யான வாக் குறு திகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலா ளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.


இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டு உள்ளார். அந்த அறிக்கையில் பிரியங்கா காந்தி கூறி இருப்பதாவது: கறுப்புச் சட்டம் எனும் வேளாண் சட்டத்தை அறிமு கப்படுத்தும்போது, ​​பாஜக  குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்போம் என்று தெரிவித்தது.ஆனால், வேளாண் சட்டங்கள் மூலம் பெருமுதலாளி களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி வருகிறது. அண்மையில் மத் திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


நவம்பர் 26ஆம் தேதி தேசிய தலைநகரை இணைக் கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக டில்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் பேர ணியாகச் டில்லி செல்ல உள் ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment