இன்றைய ஆன்மிகம்?
பார்ப்பனீய பாதுகாப்பின் சூட்சமம்!
தீபாவளியன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, நரக வேதனையைப் போக்க முள் செடியுடன் நாயுருவி செடியைக் கொண்டு தலையைச் சுற்றி ஸ்நான காலத்தில் எறிய வேண்டும்.
காலையில் யமதர்ப்பணம் செய்வதும் வழக்கம்.
இதன் மந்த்ரம் -
யமாய நமஸ் தர்ப் பயாமி
தர்மராஜாய நமஸ் தர்ப்பயாமி
ம்ருத்யவே - தர்ப்பயாமி
அந்தகாய - தர்ப்பயாமி
வைவஸ்வதாய தர்ப்பயாமி
காலாய - தர்ப்பயாமி
ஸர்வ பூதக்ஷாயாய - தர்ப்பயாமி
ஔதம்பராய - தர்ப்பயாமி
சித்ராய - தர்ப்பயாமி
சித்ரகுப்தாய - நமஸ்தர்ப்பயாமி
என்று எள்ளைக் கொண்டு, தீபாவளியன்று நீரினால் இத் தர்ப்பணம் செய்தால், யமதர்ம ராஜாவின் திருப்தியால், நாம் ஒரு வருடம் செய்யும் பாபம் விலகுகிறது என்பது சாஸ்த்ரோக்த தாத்பர்யம். ஆகவே, காரண, காரியமறிந்து தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்வோமாக!
- ‘மங்கையர் மலர்', நவம்பர் 1-15 (2020).
ஒரு பண்டிகையை வைத்து எப்படி எல்லாம் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள் பார்த்தீர்களா?
எமதர்ம ராஜாவாம் - அப்படி ஒருவன் இருக்கின்றானா?
இந்த 2020 லும் மூடநம்பிக்கையைப் பரப்பினால்தான் பார்ப்பனீயத்தின் சரக்கு செல்லுபடியாகும் என்பதுதான் இதன் சூட்சமம்!
No comments:
Post a Comment