வடநாட்டில் பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

வடநாட்டில் பெரியார்

திரு.சாடிலால் சாத்தி

டாக்டர் அம்பேத்கருக்கு பின் இந்திய குடியரசுக் கட்சிக்கு தலைமையேற்றவர்

திரு.சாடிலால் சாத்தி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார் 1959இல் வடஇந்திய

சுற்றுப்பயணம் செய்தபோது அவருக்கு வரவேற்பு அளித்து பெருமைப்படுத்தியவர்.

வடஇந்திய மக்களாகிய நாங்கள் பெரியார் அவர்களின் இயக்கத்தின் பெருமைகளையும் அவரது பிரச்சாரங்களை யும், செய்திகள் வெளியாவதையும் மிக்க ஆவலுடன் எப்போதும் விரும்பி, கண்டு வருகிறோம்.

பெரியார் அவர்கள் எப்போதுமே பிற்படுத்தப்பட்ட மக்களின் நலத்தைப் பற்றிய கவலை கொண்டு அவர்க ளுக்கு தக்க சமயத்தில் ஏற்ற முறைகளைக் கையாண்டு நலம் தேடித் தருவதில் கருத்துக்கொண்டு உழைத்து வருவதை நான் அறிவேன். பெரியாரவர்களது இயக்கமான திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் வட இந்தியாவிலுள்ள நாங்கள் மிகவும் விரும்பி அறிவதுடன் அவ்வழியில் உந்தப்பட்டு ஊக்கமடைந்து வருகிறோம்.

இதனாலேயே பெரியாரவர்கள் தென்னாட்டுக்கு மட்டும் தலைவராகக் கருதப்படாமல் இந்நாட்டின் மற்றைப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் தலைவராகவும் நாட்டின் தந்தையாகவே கருதப்படுபவராக விளங்குகிறார்.

இவ்வித உணர்ச்சி வயப்பட்டே 1960ஆம் ஆண்டில் பிப்ரவரி 8இல் பெரியார் அவர்களை நாங்கள் விரும்பி அழைத்ததற்கேற்ப அவர்களும் ஒப்புக்கொண்டு கான்பூர் வந்து சேர்ந்தார்கள். ரயில்வே நிலையத்தில் வடஇந்தியா வின் பல பக்கங்களிலிருந்தும் வந்து குவிந்த 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் தலைசிறந்த தலைவராம் பெரியாரவர்களுக்கு சிறப்பு மிக்க வரவேற்பு அளித்தனர்.

சுமார் நான்கு மைல்கள் நீளமுள்ள மாபெரும் ஊர் வலமும் நகரின் முக்கிய சாலைகளின் வழியே செலுத்தப் பட்டு எங்கும் குதூகலம் ததும்பியது!

அக்காலத்தில் சில குறுகிய மனம் படைத்த இந்து மத வெறியர்கள், உத்தரப்பிரதேசத்திலும் அவர் வருவதாகக் குறிப்பிட்டிருந்தோம். பெரியார் வரவொட்டாமல் தடை செய்ய வேண்டுமென்றும், வந்தால் விபரீதம் நிகழும் என்று அச்சுறுத்தியும் துண்டு வெளியீடுகள் வெளியிட்டி ருந்தனர். இதையறிந்த நமது மக்கள் (தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள்) கொதிப்புற்று பளபள ஒளிவீசும் பட்டாக் கத்திகளுடனும் துப்பாக்கிகளை ஏந்தியும் பெரியாரைப் புடைசூழ்ந்து நின்று, மிக அதிக ஊக் கத்துடனும் உத்வேக உணர்ச்சியுடனும் ஒலி முழக்கங் களுடன் ஊர்வலத்தை நடத்தி முன்னேறிச் சென்றனர்.

ஆரியோ பாரத்சோடோ! நஹீஞ் துமாரே பாப்கா!” “ஆரியர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! இது உங்கள் அப்பன் நாடல்ல!”

இந்துஸ்தான் ஹமாரா ஹை!” “இந்தியா எங்களு டையதே!”

லாவூ புருஷ் பெரியார் ஜிந்தாபாத்!” “இரும்பு மனிதர் பெரியார் நீடு வாழ்க!”

பொம்மன் ஷாஹி நஹீங் சலேகி!” “பார்ப்பான் ஜம்பம் இனி பலிக்காது!” என்பது போன்ற ஒலி முழக்கங்களை முழங்கிய வண்ணம் ஊர்வலம் சென்றது.

அதே நாளில் கான்பூர் காங்கிரசுக்காரர்கள் பெரியார் அவர்களின் கூட்டத்தை நடைபெற வொட்டாமற் செய்வ தற்காக சதிசெய்து, இந்திய சர்க்கார் உள்துறை அமைச்சராக இருந்த பண்டித கோவிந்த வல்லப பந்த் அவர்களையும், .பி.யின் அந்நாள் முதலமைச்சர் திரு.சம்பூரணானந் தரையும் வரவழைத்து ஒரு பொதுக் கூட்டம் தனியே நடத் தச் செய்தனர். ஆனால், முடிவு என்ன தெரியுமா? காங்கிர சுக் கூட்டம் பிசுபிசுத்துப் போயிற்று; தோல்வி கண்டது.

இந்திய குடியரசுக் கட்சியினால் அமைக்கப்பட்ட பெரியார் .வெ.ரா. கலந்து கொண்டு பேசிய கூட்டத்துக்கு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். அதுமட்டுமல்ல, பெரியார் அவர்கள் இரண்டு மணிக்கும் அதிகமாகப் பேசிய சிறந்த கருத்துகளை அமைதியுடன் ஊசி விழுந்தாலும் கேட்கும்படியான அவ்வளவு நிசப்த மாக இருந்து கடைசிவரை கேட்டனர்.

பெரியார் அவர்கள் அநேக உதாரணங்களுடன் இந்து மத நூல்களான வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், கீதை, ராமாயணம், பாரதம் முதலியவற்றிலிருந்து பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, நாட்டில் உள்ள 90 சதவிகித மக்களை மதத்தின் பேரால் ஒரு சில பார்ப்பனர்கள் ஏமாற்றிச் சுரண்டித் தின்ன ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சித் திட்டமென்றும் கூறினார்கள்.

மற்றும் இந்த 90 சதவிகித மக்களும் அதாவது ஷெடி யூல்டு வகுப்பினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் சூத்திரர் என்ற அடிமைப் பட்டயத்துக்கு உட்பட்டவர்கள் என்பதையும் நன்கு எடுத்துக் காட்டினார்.

இந்த விவரங்களையெல்லாம் கேட்ட வட இந்திய மக்கள் அனைவரும் பெரியார் அவர்களின் தலைமையை யேற்று அவர் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் உயிரையும் கொடுத்து அவர் இட்ட பணிகளை நிறைவேற்றத் தயா ரென்று உறுதி பூண்டனர்.

பெரியார் அவர்களின் அன்றைய கருத்துரை .பி. சர்க்காருக்கு ஓர் அச்சத்தை யூட்டியதென்றே கூறலாம். காங்கிரசு சட்டசபை உறுப்பினர்களும் பெரியார் அவர் களை உத்தரப்பிரதேசத்திலும், லட்சுமணபுரியிலும் நுழை விடக் கூடாதென்று தூண்டுமளவுக்கு அச்சமூட்டிவிட்டது. ஆனால், குடியரசுக் கட்சியோ சர்க்காருக்கு எச்சரிக்கை யளித்து இம்மாதிரி  ஏதாவது விஷமங்கள் சர்க்கார் தரப் பிலிருந்து ஏற்படுமாயின், அதனால் ஏற்படும் பின் விளை வுகளுக்கு அரசினரே பொறுப்பாக நேரிடுமென்றும், அரசி யல் சட்ட உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக சட்ட விரோ தமான நடவடிக்கைகளில் இறங்கி பெரியாரின் லக்னோ வருகையைத் தடுக்கலாகாதென்றும், கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுத் தூண்டுதலுக்கு செவிமடுக் கலாகாதென்றும் வன்மையாகக் கண்டித்தனர். பெரியார் அவர்கள் லக்னோவில் இரண்டு மாபெரும் கூட்டங்களில் பேசினார். பல்லாயிரக்கணக்கான மக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களும் ஏராளமாக வந்திருந்து அமைதியாய் பெரியார் பேருரை யைக் கேட்டனர்.

பெரியார் அவர்கள் 1960ஆம் ஆண்டில் அவரது தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றபோதிலும் இன்னமும் அவரது பேருரை வடஇந்தியாவில் எல்லாவிடங்களிலும் குன்றாது உணர்ச்சியைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே பெரியார் அவர்கள் பேசும்போது வடஇந் தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நமது இயக்கத் தில் சேரத் தயாராகவுள்ளனர். நேருவுக்கு அவர் மாகாண மான உத்தரப்பிரதேசத்திலேயே பெருமை காக்கப்பட முடியவில்லை என்று கூறியுள்ளார். ஆகவே, அனைவரை யும் நடத்திச் செல்ல பெரியார் .வெ.ரா. அவர்கள் நீண்ட காலம் சுகவாழ்வு எய்த வேண்டுமென்று மனமார விரும்புகிறோம். பெரியார் அவர்களைத் தலைமையாகப் பெற்றமைக்கு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்தியத் இயக்கங்களின் வரலாற்றில் பெரியார் மிகச் சிறந்த தலைவராகப் பொறிக்கப்படுபவருமாயிருப்பதுடன் இந்த எண்பத்து நான்கு வயதிலும் பெரியார் அவர்கள் புரட்சியின் சின்னமாக விளங்குகிறார்கள். தாழ்த்தப்பட்டுக் கிடப்பவர் களின் ஊக்கத்தின் ஊன்றுகோலாகத் திகழும் தலைவர் அவரேயன்றி வேறெவர் உண்டு! என் சார்பாகவும் இந்திய குடியரசு கட்சியின் சார்பிலும் மீண்டும் பெரியார் அவர்கள் நீண்ட காலம் சுகவாழ்வு எய்த வேண்டுமென மனமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தந்தை பெரியார் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் -1962)

No comments:

Post a Comment