திராவிடம் வெல்லும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 12, 2020

திராவிடம் வெல்லும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்


சென்னை,டிச.12, திராவிடம் வெல்லும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் (16.3.2021) தொடங்கி நடைபெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (12.12.2020) காலை திராவிடர்  கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களை சந்தித்தார். செய்தி யாளர்கள் சந்திப்பின் போது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக் குமார், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி உள்பட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதாவது:

செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள் ளோம். அதில் நீதித் துறையில் சமூக நீதி, பாலியல் நீதி இருக்க வேண்டும். பெண்களில் உயர் ஜாதியினர் மட்டும் என்று இருக்கக் கூடாது.

பிரதமர் மோடி தமிழ் குறித்து, திருக்குறள் குறித்து, பாரதியார் குறித் தெல்லாம் பேசிவருகிறார். ஆனால், சமஸ்கிருதம், இந்தி திணிப் புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எழுவர் விடுதலையில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி எவ்வளவு காலம் ஆகியுள்ளது? அவர்களின் விடுதலையை மத்திய அரசு தடை செய்கிறது. ஆளுநர் மத்திய அரசின் ஏஜெண்ட் ஆக உள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ப தற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

அதற்கான பிரச்சாரத்தை மேற் கொள்ளும் சுற்றுப்பயணம் என் தலை மையில் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் மார்ச் 16இல் தொடங்கும். 'திராவிடம் வெல்லும்' எனும் தலைப்பில் பிரச்சாரத்துடன் சுற்றுப்பயணம் நடைபெறும்.

No comments:

Post a Comment