தாழ்த்தப்பட்ட சிறுவர்களை மலம் அள்ளவைத்த சம்பவம் : மூவர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

தாழ்த்தப்பட்ட சிறுவர்களை மலம் அள்ளவைத்த சம்பவம் : மூவர் கைது!

பெரம்பலுர்,டிச.14, தாழ்த்தப் பட்ட சிறுவர்களை மலம் அள்ள வைத்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறு குடல் பகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் மலம் கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வேறு சமூகத்தை சேர்ந்த அபினேஷ், செல்வகுமார், சிலம் பரசன் ஆகிய மூன்று இளைஞர்கள் சிறுவர்கள் மலத்தை அள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து சிறுவர்கள் அங் குள்ள மலத்தை அள்ளி சாக்குப் பையில் வைத்துள்ளனர்.

இதை கண்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் இளை ஞர்களை கண்டித்ததுடன் அதற் கான புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அத்துடன் சிறுவர்களை ஜாதிப் பெயரை கூறி துன்புறுத்திய இளைஞர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் விசிகவினரும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் சிறுகுடல் பகுதியில் தாழ்த்தப்பட்ட இன சிறுவர்களை மலம் அள்ளவைத்த சம்பவத்தில் அவினேஸ், செல்வக் குமார், சிலம்பரசன் ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment