சிறுபான்மை மக்கள் வீடுகள்மீது கல்வீசித் தாக்குதல்
போபால்,
டிச.29 பாஜக ஆளும்மத் தியப்
பிரதேச மாநிலத்தில் ராமன் கோயில் கட்ட
நிதி திரட்டுவதற்காக பாஜகவினர் ஊர் வலமாகச் சென்று
வன்முறை வெறி யாட் டத்தை
நடத்தியுள்ளனர். இதற்கு பொது மக்கள்
மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது.
அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இத னால், பதற்றமான சூழல்
அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச
மாநிலத்தில் பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். விசுவ
ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட பல்வேறு
சங் பரி வாரங்களைச் சேர்ந்தவர்கள்
அயோத்தி யில் ராமன் கோயில்
கட்டுவதற்காக நிதி திரட்டுவதன் பெயரால்
ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.
அப்போது மதவெறியைத் தூண்டும் முழக்கங்களை அவர்கள் எழுப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. உஜ்ஜயினி மாவட்டம் பெகும்பாக் பகுதி யில் கடந்த
25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6.30 மணிக்கு பொதுமக்கள் மற்றும் சங் பரிவார் கும்பலைச்
சேர்ந்த வர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஹிந்துத்துவா
அமைப்பினர் தங்களது வீடு களை நோக்கி
கல்வீச்சில் ஈடுபட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே
மத்தியப் பிரதேச மாநில பாஜக
அரசு அப்பகுதிவாழ் மக்களிடம் அதிகார ஆணவத்துடன் ஒடுக்கு
முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பஜ்ரங் தள் உள்ளிட்ட
ஹிந்துத்துவ அமைப் பினரின் ஊர்வலம்மீது
கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், ஊர்வலத்துக்கு எதிராக முழக்கமிட்டதாகவும்கூறி,இரண்டு அடுக்கு வீட்டை
இடித்துள்ளனர். எட்டு பேரைக் கைது
செய்துள்ள அம்மாநில பாஜக அரசு, நால்வர்மீது
தேசப் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப்
பதிவு செய்துள்ளது.
சிறுபான்மையினர்
வசிக்கும் பகுதி யான பேகம்பாக்
பகுதியில் சங் பரிவார் அமைப்பினரால்
திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில்
வன்முறை வெடித்த தையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து
தடியடி நடத்தி அப்பகுதியினரை காவல்
துறையினர் விரட்டியடித்துள்ளனர். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம்.
அவர் குடி யிருந்த வீடு
உள்பட இரண்டு வீடுகளை ஜேசிபி
இயந்திரம்மூலம் அம்மாநில அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தினர்
இடித்துள்ளனர்.
இடிக்கப்பட்ட
வீடுகள் வாடகைக் கட்டடங்களாகும். இதில் ஒரு வீட்டின்
உரிமையாளர் பெயர், திக்கா ராம்
என் பதும், மற்றொரு வீட்டு
உரிமையாளரின் பெயர் ஹமீது என்பதும்
தெரிய வந் துள்ளது. 'மத்தியப்
பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிரிமினல்கள் உடனடியாக வெளியேறி விடுங்கள், இல்லாவிட்டால், 10 அடிக்கு குழி தோண்டி புதைத்து
விடுவேன்' என மத்தியப் பிரதேச
பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அண்மையில்
பேசியதன் தொடர்ச்சியாக, அம்மாநிலத்தில் பாஜகவினர் அதிகார ஆணவத்துடன் ராமன்
கோயில் நிதி திரட்டல், ஊர்வலம்
என்கிற பெயரால் மத வெறியுடன் வன்முறை
வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment