பன்னாட்டளவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21 லட்சத்து 82 ஆயிரம் பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 28, 2021

பன்னாட்டளவில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21 லட்சத்து 82 ஆயிரம் பேர் உயிரிழப்பு

புதுடில்லி, ஜன. 28- உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டி யது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 லட்சத்து 82ஆயிரத்து 72 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர்.

பன்னாட்டளவில் கரோனா வைரஸ் தொற்றால் 10கோடியே 13 லட்சத்து 96ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7கோடியே 32லட்சத்து 75 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1லட்சத்து 10ஆயிரத்து 139பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் தற்போது 2ஆவது கட்ட கரோனா அலை அமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப் படி, உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதன்படி பன்னாட்டளவில் தற்போது 10கோடியே 14 லட்சத்து 862 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7கோடியே 32 லட் சத்து 95ஆயிரத்து 524 பேர் குணமடைந் துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 82 ஆயிரத்து 193 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு தற்போது 2கோடியே 59லட்சத்து 20ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1லட்சத்து 10ஆயிரத்து 114 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

Post a Comment