கரோனா பாதிப்பு: பன்னாட்டளவில் 10 கோடியை தாண்டியது 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 26, 2021

கரோனா பாதிப்பு: பன்னாட்டளவில் 10 கோடியை தாண்டியது 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு

புதுடில்லி, ஜன.26- உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த2,148,467 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 100,257,803 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் 72,255,817 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,438 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்த பாடில்லை.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண் ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.21 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள் ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத் துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

No comments:

Post a Comment