தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 28, 2021

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை, ஜன. 28- தமிழகத் தில் வருகிற 31ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைக ளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகி றது. இந்த முகாம் கடந்த 17ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், கரோனா தடுப்பூசி போடும் பணி கார ணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப் பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி, 43 ஆயிரத்து 51 மய்யங் களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகா தாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங் கன்வாடி மய்யங்கள், சத்து ணவு மய்யங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந் தைகளுக்காக, பேருந்து நிலை யம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

No comments:

Post a Comment