50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 5, 2021

50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

வேலூர்,ஜன.5- கரோனா பரவல் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடை பெற வுள்ளதுஇதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறதுசட்டமன்ற தேர்தல் பணிகளில் வழக்கமாக ஆசிரியர்கள்அரசு அலு வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்இதை கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறதுஅதன்படி பள்ளி தலைமை யாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவ லர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவல கங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுதவிர ஏற்கெனவே பட்டியல் சமர்ப்பித்தவர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும்கரோனா தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பட்டி யலில் சேர்க்கக்கூடாதுஅதேபோன்று ஆசிரியர்களின் புகைப்படம்வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாதுஅவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்அதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment