புதுச்சேரி, ஜன.
25- புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலை வர் ஏ.வி.சுப்பிரமணியன்
தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட் டத்தில் முதல்-அமைச்சர் நாரா யணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
புதுச்சேரியில்
வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்கான ஆயத்த கூட்டம் தான் இது. நானும் அமைச்சர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந் தித்து பேசினோம். அவர்கள் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். ராகுல் காந்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) புதுவை வருவதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு 3 முறை இங்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியை
பொறுத்த வரை தி.மு.க.
நமது கூட்டணி யில் தான் உள்ளது.
பா.ஜ.க.விற்கு
நம்மை எதிர்த்து போராட்டம் நடத் துவது தான் வேலை. அரசு சார்பில் நாங்கள் அனுப்பும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பதில்லை. எனவே தான் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த முடிய வில்லை. ஆனால் பா.ஜ.க.
வினர் தேர்தல் அறிக்கையை தீ வைத்து கொளுத்துகின்ற
னர்.
இரட்டை
வேடம் போடும் பா.ஜ.க.வின்
ஜம்பம் புதுவை, தமிழகத்தில் பலிக் காது. அவர்களால் ஒரு இடத் தில் கூட வெற்றி பெறமுடி யாது. புதுவையில் பா.ஜ.க.வை கூண்டோடு அழிக்க
வேண் டிய கடமை, பொறுப்பு நமக்கு உள்ளது.
நமது
பிரச்சார குழுவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு தொகுதியாக சென்று மக் களை சந்தித்து அரசு சார்பில் ஏற்கெனவே நிறைவேற்றப் பட்டுள்ள மக்கள் நலத்திட் டங்கள் குறித்தும், ஆளுநர் அனுமதி வழங்காததால் செயல் படுத்த முடியாத திட் டங்கள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.
ஆளுநர்
கிரண்பெடி புது வையில் இருப்பது ஒரு வகை யில் நமக்கு நல்லது தான். அவர் இருந்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. அதேபோல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர் தலிலும் அமோக வெற்றி பெற முடியும்.
புதுவையை
பொறுத்த வரை தற்போதுள்ள சூழலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்க
ணிக்கிறார்கள். அவர்களு டன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார் கள். தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இனிமேல் நாம் தேர்தல் பணியை விரைவாக தொடங்க வேண்டும். பிரச்சாரத்துக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு
அவர் கூறினார்.

No comments:
Post a Comment