கவுன்சிலர் தேர்தலுக்கு கூட போட்டியிட பா.ஜ.க.வில் ஆள் இல்லை: பஞ்சாபில் பா.ஜ.க. பரிதாபங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 28, 2021

கவுன்சிலர் தேர்தலுக்கு கூட போட்டியிட பா.ஜ.க.வில் ஆள் இல்லை: பஞ்சாபில் பா.ஜ.க. பரிதாபங்கள்

ஜலந்தர், ஜன.28 பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள 77 கவுன்சிலர் இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளூரில் யாரும் முன்வராத நிலையில் டில்லி யில் இருக்கும் உறவினர்களை அழைத்துவந்து போட்டியிட வைக்கும் நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.

 பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த சட்டங் களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு இவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை.  26.1.2021  அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கடும் வன்முறை வெடித்து டில்லியில் 144 தடை உத்தரவு இடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சார் மாவட்டத்தில் உள்ள மூன்று நகரங்களில் 77 கவுன்சிலர் இடங்களுக்குத் தேர்தல் நடக்க உள்ளது.  இந்த பகுதி பாஜக தலைமை தங்கள் கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துப் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட யாருமே முன்வர வில்லை. இதனால் அதிர்ந்து போன பாஜக எப்படியும் போட்டி யிட்டே ஆகவேண்டும் என்ற காரணத்தால் டில்லியில் உள்ள உறவினர்களை அழைத்துவந்து போட்டியிட மனுகொடுக்க வைத்துள்ளனர். அதிலும் சிலர் இரவோடு இரவாக மீண்டும் டில்லிக்கு ஓடிவிட வெறும் 44 பேர் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளனர்.  இதற்கு முக்கிய காரணம் விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக அச்சம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து முக்த்சார் மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்,  ஒரு சில தொண்டர்கள் விவசாயிகள் போராட்டம் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் அவர்கள் கருத்தை மாநில தலைவர் அஸ்வனி சர்மாவிடம் தெரிவித்துள்ளோம்.  இது குறித்து ஏற்கெனவே இருமுறை அவரை சந்தித்துள்ளேன். மீண்டும் வரும் 29 ஆம் தேதி அன்று சந்திப்பு நிகழ உள்ளது.   இதுவரை 44 மனுக்கள் வந்துள்ளது'' என்று கூறினார்.


No comments:

Post a Comment