அய்.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை உறுதி செய்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 28, 2021

அய்.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை உறுதி செய்வீர்!

இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும்  நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கடிதம் 

சென்னை,ஜன.28- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.1.2021) அண்ணா அறிவால யத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத் துள்ள நிலையிலும், அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்சினை எழுகின்ற நேரத்தில்கூட மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது.

ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறதுஎன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப் படையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணை யத்தின் 46 ஆவது கூட்டம் தொடர்பாக இக்கடிதத்தை தங்களுக்கு தற்போது எழுதுகிறேன். கடந்த 6.1.2021 அன்று இலங்கை சென்ற நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்தார். இது ஆக்கப்பூர்வமான தீர்வினை தந்துவிடவில்லை. அதே நேரத்தில், நடைபெறவிருக்கின்ற அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடர்பாக, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

பன்னாட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும்!

1987ஆம் ஆண்டு உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்த உத்தரவாதத்திற்கு எதிராகவே இலங்கையில் அடுத் தடுத்து வரும் ஒவ்வொரு அரசும் நடந்து கொண்டி ருக்கின்றன. இந்தத் தருணத்தில், ‘ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களை பன்னாட்டு நீதிமன் றத்திற்கு அனுப்பவேண்டும்என்று அய்க்கிய நாடுகள் சபை யின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத் தும் ஒருங்கிணைந்து, ஒருமனதாக கோரிக்கை விடுத் துள்ளதை பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

கண்ணியத்துடன் வாழ வேண்டும்!

கடந்த காலத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே, அய்க்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே போல் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும், தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதுடன் இதைவிட அதிக அதிகாரம் பெற்று, இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண் டும் என்பது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் உடனடி முயற்சியும், தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment