கருநாடக பா.ஜ.க.வில் குழப்பம் அய்ந்து நாட்களில் நான்கு முறை அமைச்சரவையை மாற்றிய எடியூரப்பா... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 26, 2021

கருநாடக பா.ஜ.க.வில் குழப்பம் அய்ந்து நாட்களில் நான்கு முறை அமைச்சரவையை மாற்றிய எடியூரப்பா...

பெங்களூரு, ஜன.26 கருநாடக  மாநி லத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையி லான பா... ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு காங் கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளில் இருந்து விலகி பா.ஜக.வில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வந்ததால்,கடந்த 21 ஆம் தேதி 7 அமைச்சர்களைத் தனது அமைச் சரவையில் சேர்த்துக்கொண்டார். அவர்களுக்கு இலாகாக்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட துறைகளைப் பல அமைச்சர்கள் விரும்ப வில்லை. இதனால் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட இலாகாக்களை அடிக் கடி மாற்றி வருகிறார், எடியூரப்பா.

கடந்த திங்கள்கிழமை அன்று மட்டும் இரு அமைச்சர்களுக்கு ஒதுக் கப்பட்ட இலாகாக்களை நான்கு மணி நேரத்தில் இரண்டு தடவை மாற்றினார்.

அமைச்சரவையை மாற்றியமைத்த அய்ந்து நாட்களில், இதுவரை நான்கு முறை மாற்றி அமைத்துள்ளார். பா... மூத்த தலைவர்கள் மத்தியில், இது கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment