நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான ‘சந்திரயான்-3’ விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான ‘சந்திரயான்-3’ விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் தகவல்

 புதுடில்லி. பிப். 25- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-ஆவது விண்கலமானசந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்றுஇஸ்ரோதலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானஇஸ்ரோவின் பல விண்வெளி திட்டப்பணிகள், கரோனா தாக்கம் காரணமாக பாதிக் கப்பட்டுள்ளன. அவற்றில், விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் முத லாவது திட்டமான ககன்யா னும், நிலவுக்குசந்திரயான்-3’ விண்கலத்தை அனுப்புவதும் அடங்கும். கடந்த ஆண்டு இறுதியில் ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவத் திட்ட மிடப்பட்டிருந்த சந்திரயான் -3 திட்டம், தள்ளிப்போய் விட்டது.

இந்நிலையில் அது தொடர்பாகஇஸ்ரோதலை வர் கே.சிவன் அளித்த பேட் டியில் கூறியதாவது:-

‘‘நாங்கள் சந்திரயான்-3 திட்டப்பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். இது, சந்திரயான்-2 மாதிரியே உள் ளமைவைக் கொண்டிருக்கும். ஆனால் இதற்குஆர்பிட்டர்இருக்காது. சந்திரயான்-2 உடன் ஏவப்பட்ட ஆர்பிட் டரேசந்திரயான்-3’-க்கும் பயன் படுத்திக்கொள்ளப்படும். அதை நோக்கி ஒரு முறையில் நாங்கள் செயல்பட்டுக் கொண் டிருக்கிறோம். அனேகமாக, அடுத்த 2022-ஆம் ஆண்டு வாக்கில் சந்திரயான்-3 விண் கலம் விண்ணில் ஏவப்படும்.

ககன்யான் திட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் விண்கலத்தை அனுப்ப திட்ட மிடப்பட்டிருந்தது. அது, இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஆளில்லா விண்கலம் அனுப் பப்படும். ககன்யானின் பிர தானமான மூன்றாவது கட் டத்தில், 2022-ஆம் ஆண்டில் 3 இந்திய வீரர்கள் விண் வெளிக்கு அனுப்ப எண்ணியிருக்கிறோம். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பயிற்சி பைலட்டுகள் தற் போது ரசியாவில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை பொறுத்த வரை, நிறைய தொழில்நுட் பங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அனைத்து தொழில்நுட்பங்க ளும் மிகச் சரியாக இருக்கின் றன என்று உறுதி செய்யப் பட்ட பின்பே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாளை நாங்கள் முடிவு செய் வோம்.’’ இவ்வாறு அவர் கூறினார்.

வேற்றுக் கிரகங்களில் லேண்டரை இறக்கும் இந்தி யாவின் திறனை வெளிப் படுத்தக்கூடியது என்பதால், சந்திரயான்-3, இஸ்ரோவைப் பொறுத்தவரை மிக முக்கிய மானதாகும். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-2 மூலம், சந்திரனின் அறியப் படாத தென்துருவப் பகுதி யில் ஒருரோவரைஇறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டு செப் டம்பர் 7-ல் நிலவின் பரப் பில் மோதிய விக்ரம் லேண்ட ரால், தனது முதல் முயற்சியிலேயே நிலவுப் பரப் பில் வெற்றிகரமாகத் தரையிறங் கும் இந்தியாவின் கனவு தகர்ந்து போனது நினைவிருக்கும்.

No comments:

Post a Comment