கடன்கார அரசு?
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
இலட்சக்கணக்கானோர் வேலையின்றித் தவிக்கும் ஒரு கால கட்டத்தில் இந்த ஓய்வு வயது உயர்வு தேவையா?
ஓய்வு பெற்றால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணி நன்கொடை உள்ளிட்ட வற்றிற்கு ரூ.பாய் 10 ஆயிரம் கோடி தேவைப் படுவதால் கடன்கார அரசால் அதனை சமாளிக்க இயலாத நிலைதான் இதன் பின்னணியா?
கரண்டி மட்டுமல்ல - வாக்குச்சீட்டும்தான்!
இந்த மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு உயர்வு ரூ.100. தற்போது அதன் விலை ரூ.810/-
குடும்பத் தலைவிகளின் கைகளில் வெறும் கரண்டிதான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம் - வாக்குச்சீட்டும் இருக்கிறதே!
கடந்தாண்டு என்னாச்சு?
'நீட்' தேர்வில் வெற்றி பெற சிறப்புப் பயிற்சி - சென்னை மாநகர ஆணையர் தொடங்கி வைத்தார்.
கடந்தாண்டு தமிழ்நாடு அரசு அளித்த பயிற்சியில் வெற்றி பெற்றவர் பூச்சியம் தானே!
ஓ, தடுத்தாட் கொண்டாரோ!
கோவை வந்த பிரதமர் மோடியின் காலில் விழ முயன்றார் அதிமுக எம்.பி. ஓ.பி. இரவீந்திரநாத் (துணை முதல்வர் ஓ.பி.எஸ்.இன் மகன்) - தடுத்து விட்டார் பிரதமர்.
அதிமுகவுக்கு ஏற்கெனவே உள்ள அடிமை அரசு என்ற பெயர் நிலைக்க வேண்டாமா?
விபத்துக்கு விடுமுறை இல்லையோ!
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் விபத்து - 4 பெண்கள் உட்பட அய்வர் மரணம்.
வெடி விபத்துக்கு விடுமுறையே கிடை யாதா? 'நல்ல அரசு நல்ல நிர்வாகக் கூத்து!'
பிரதமர் மறந்த ஒன்று!
புதுச்சேரியின் தலைநகரம் டில்லியாக இருக்கக் கூடாது.
- பிரதமர் மோடி
பிரதமருக்கான தலைமையிடம் - பீடம் நாக்பூர் என்பதைப் பிரதமர் மறந்து விட்டாரோ!
பாசிஸ்டு பரீட்சையில் 'பாஸ்!'
சமூக வலைதளங்களுக்கான விதிமுறைகள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியீடு
பாசிஸ்டுகளின் முதல் தாக்குதல் எப்பொழுதுமே ஊடகங்களின்மீது தானே!
வறுமையையா - வறுமையாளர்களையா?
சீனாவில் 100 விழுக்காடு வறுமை ஒழிப்பு.
இந்தியாவில் வறுமையில் உள்ளவர்களை ஒழிக்காமல் இருந்தால் சரி!
No comments:
Post a Comment