இந்தியாவில் ஜனநாயகம் படும்பாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 12, 2021

இந்தியாவில் ஜனநாயகம் படும்பாடு!

போராட்டத்தின் போதெல்லாம் இணையத்தை முடக்குவது இந்தியாவுக்கே அவமானம் எனக் குறிப்பிட்டு அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் இணைய சேவையை அரசே முடக்குவது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு இணைய சேவையை முடக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், பா.. ஆட்சிக்கு வந்தது முதல் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. போராட்டத்தை ஒடுக்குவதற்குத் துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளில் அரசே இறங்குவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு தகுதி வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தின்போதும், நவம்பர் மாதத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங் களின்போதும் இணைய சேவை பா... அரசால் முடக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின்போதும் இணைய சேவை முடக்கப்பட்டது. இவ்வாறாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே 400 முறைக்கும் மேல் இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 213 நாட்கள் தொடர்ந்து இணைய சேவை முடக்கப்பட்டதானது - இதுவரை, உலகின் மிக நீண்ட இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது.

 2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள் ளது. பாகிஸ்தானில் 12 முறை இணைய சேவை துண்டிக் கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதமே நிறைவடைந்திருக்கும் நிலையில், 7 முறை இணையத்தை முடக்கியுள்ளது பா.. அரசு. விவசாயிகள் போராட்டத் தின் காரணமாக அரியானா மற்றும் தலைநகர் டில்லியில் இணைய சேவை முடக்கப்பட்டது.இந்நிலையில், போராட் டத்தின் போதெல்லாம் இணையத்தை முடக்குவது இந்தியாவுக்கே அவமானம் எனக் குறிப்பிட்டு அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.. பாப்டேவுக்கு பூனாவாலா எழுதியுள்ள கடிதத்தில், எப்போதெல்லாம் மக்கள் போராட்டம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் அரசு இணைய சேவையை தன்னிச் சையாக துண்டித்துவிடுகிறது. தற்போது ஆளும் பா... அரசு உலகிலேயே அதிக அளவில் இணைய முடக்கம் செய்தசாதனையை' இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. இது ஒரு அவமானகரமான சாதனை.

இதுகுறித்த வழக்கை தாங்கள் தானாகவே முன்வந்து ஏற்று நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன். தற்போதைய அரசும் அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தேசவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடு படுகிறார்கள். இதற்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். என வலியுறுத்தியுள்ளார்.

எழுத்தாளர் பூனாவாலாவின் கடிதத்திற்கு எந்தவித அரசியல் சாயத்தையும் பூசக்கூடாது முடியாது.

நாடாளுமன்றத்தில் - மாநிலங்களவையில் உரை யாற்றிய திருச்சி சிவா அவர்கள் ஓர் அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்கள், தகவல்கள் நாடாளுமன்ற ஆவணக் குறிப்பில் பதிவு செய்யப்படவில்லை என்பது தான் அது.

இந்தியா ஜனநாயகக் குடியரசு நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வது பெருமைக்கு உரியது தானா? உலக அளவில் இந்தியாவின் மீதான மதிப்பீடு எந்த அளவில் இருக்கும் என்று எண்ணிப்பார்க்கட்டும் பா..., சங்பரிவார் வட்டாரங்கள்.

இது போன்ற நடவடிக்கைகள் பாசிச ஆட்சியில் உண்டு. அப்படியானால் பா... ஆட்சியும் - பாசிசமே.

No comments:

Post a Comment