நாத்திகத் துறையாகமாறிவிட்டதா?
திருவண்ணாமலையில்
12 ஆம் மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை!
இந்து
அறநிலையத் துறை நாத்திகத் துறையாக மாறிவிட்டதோ!
எங்கே
தேடுவோம் பணத்தை?
நூறு
நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால் நூறு நாட்களுக்குப் பதிலாக 30 நாளுக்கான சம்பளம்தான் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது :
- கிருட்டினகிரி
போச்சம் பள்ளியில் பொதுமக்கள் குமுறல்.
மீதி
70 நாள் சம்பளமும் எங்கே போகிறது? தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யவா?
குழந்தைத்
தனமானது!
என்
மடியில் விளையாடியவர் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி : - முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆவேசம்.
எவரும்
எவருடைய மடியிலாவது குழந்தைப் பருவத்தில் விளையாடித்தான் இருப்பார்கள் - அதுவா பிரச்சினை?
இதன்
பொருள்?
புதுச்சேரி
மாநிலத்தில் ஏழாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி.
இதன்
பொருள் ஆளும் கட்சியின் ஆட்சி என்பதாகும்.
கம்பி
‘நீட்'டியிருப்பார்கள்
‘நீட்'
ஆள் மாறாட்ட வழக்கு - குற்றவாளி ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? - உயர்நீதிமன்றம் கேள்வி.
பாதுகாப்பாகக்
கம்பி ‘நீட்'டியிருப்பார்களோ!
பா.ஜ.க.வுக்குப்
புரியும்மொழியில்...
மேற்கு
வங்கத்தில் பிரபல கிரிக்கெட்காரர் மனோஜ் திவாரி, நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முஸ்பிக், யோனி கோஸ் ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.
பா.ஜ.க.வுக்குப்
புரிகிற மொழியில் திரிணாமுல் காங்கிரஸ் பேசுகிறதோ!
No comments:
Post a Comment