மலேசியத் திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாக.ஜீவா அவர்களுக்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 18, 2021

மலேசியத் திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாக.ஜீவா அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

மலேசிய திராவிடர் கழக முன்னோடிகளில் ஒருவரும், மலேசிய திராவிடர் கழகத்தின் பெட்டாலிங் ஜெயா/ காஜாங் கிளைகளின் மேனாள் தலை வரும், மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு தோழர் நாக.பஞ்சு அவர்களின் அண்ணனுமாகிய முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தோழர் நாக.ஜீவா என்றழைக்கப்பட்ட ஆலடியான் நாகமுத்து அவர்கள் 16.02.2021 அன்று மலேசிய நேரப்படி காலை 6.30க்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும் துயரமும் அடைகிறோம்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் நாக.ஜீவா அவர்கள், மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் தோழர் .சீ.கோமகன் அவர்களின் தமக்கையார் நிறைமலி குணசேகரி அவர்களின் வாழ்விணையர் ஆவார்!

அவரது மறைவு மலேசியத் திராவிடர் கழகத்திற்கும், பெரியாரிய கூட்டமைப்பு இயக்கத்திற்கும், தமிழ்நாடு திராவிடர் கழகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் பெரும் இழப்பு ஆகும்.

 அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர், குடும்பத்தினர்,தோழர் நாக. பஞ்சு குடும்பத்தினர் முதலிய அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு நமது வீரவணக்கம்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16-2-2021

No comments:

Post a Comment