செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

செய்தியும், சிந்தனையும்....!

வெட்டப்படுவது எத்தனை ஆயிரம்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

எட்டு வழிச் சாலைக்காக வெட்டப்படும் மரங்கள் எத்தனை ஆயிரம்?

நாட்களை எண்ணிக் கொள்க! 

செம்மொழி விருது கடந்த

10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

செம்மொழி என்றவுடன் முதலமைச்சர் கலைஞர் முயற்சியில் வந்தது என்ற நினைவுவருமே, என்ன செய்வது? இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்துப் பாடம் கற்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அழுதால்தான்

பால் கிடைக்கும் 

இன்று போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் - இடைக்கால நிவாரணமாக இன்று  ரூபாய் ஆயிரம் - அமைச்சர் அறிவிப்பு.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்

எதிர்பாருங்கள்

சட்டசபைத் தேர்தலையொட்டி வடக்கு மண்டலத்தில் 132 ரவுடிகள் கைது.

அவர்கள் விரைவில் பா...வில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

.பி.யில் சகஜமப்பா! 

.பி.யில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு எரிப்பு!

.பி.யில் தானே இதெல்லாம் வெகு சகஜமப்பா!

பொருந்துமா? 

பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் : - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வருகிறார்களே -அவர்களுக்கும் இது பொருந்த வேண்டும்.

,

ஒரே தேசமாயிற்றே!. 

ராகுல் காந்தி வடக்கு தெற்கு பேசுவது இந்தியர்களை இழிவுபடுத்துவதாகும் : - பா... கண்டனம்.

ஏன், வடக்கு தெற்கு என்ற ஒன்று கிடையவே கிடையாதா?

()துப் போதை!

மேற்கு வங்கத்தில் போதைப் பொருள் வழக்கில் பா... தலைவர் கைது.

மதப் போதைவாதிகள் மதுப் போதையிலும் ஈடுபடுவது இயற்கைதானே!

தன் புஜ பலம்?

தமிழ்நாட்டில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கமாட்டார்கள்.

நல்லதுதான்! தேர்தலிலும்கூட கூட்டணியில்லாமல் தன் பலத்தை

பா... காட்டினால் பரவாயில்லை.

No comments:

Post a Comment