வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படுவது உறுதியாம்! பிரதமர் மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படுவது உறுதியாம்! பிரதமர் மோடி

புதுடில்லி. பிப். 25 4 முக்கிய துறைகளை தவிர, மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங் களையும் தனியார்மயமாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று (24.2.2021) இணைய வழியில் பேசினார்.

அவர் பேசியதாவது:- தொழில் முயற்சிகளுக்கும், வணிகங்களுக்கும் ஆதரவு அளிப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், அந்த தொழில்களை அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல. அத னால்தான், பொதுத்துறை நிறுவனங் களை விற்க வேண்டும் அல்லது நவீ னப்படுத்த வேண்டும் என்ற கொள் கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.

ஏனென்றால், நிறைய பொதுத் துறை நிறுவனங்கள் இழப்பில் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டி இருக்கிறது. அப்படி நலிந்த நிறுவனங் களுக்கு நிதி ஆதாரம் அளிப்பதால், பொருளாதாரத்தின் மீது சுமை கூடுகிறது. பாரம்பரிய பெருமைக்காக மட்டுமே பொதுத்துறை நிறுவனங் களை நடத்தக் கூடாது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகளை சேர்ந்த குறைந்தபட்ச பொதுத்துறை நிறு வனங்களை தவிர, மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு உறுதி பூண் டுள்ளது. நாட்டில் குறைவாக பயன் படுத்தப்படும் அல்லது பயன்படுத்தப் படாத சொத்துகள் உள்ளன. அத் தகைய 100 சொத்துகளை விற்று

ரூ.2.5 லட்சம் கோடி திரட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment