கொல்கத்தா,பிப்.25- மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் இரண்டு, மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது. இதை யொட்டி, அம்மாநில முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக் கூட் டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில வங்காள நடிகர்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந் தனர்.
பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது,
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர் வையும் பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர் தலில் டிரம்புக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதை விட மோச மான முடிவுதான் மோடிக்கு ஏற்படும். வன்முறையால் எந்த பலனையும் பெற முடியாது.
இந்த சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக செயல் படுவேன். பா.ஜ.க.வால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த பந்தும் கோல் கம்பத்தை தொடாது. நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங் கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனைவியிடம் சி.பி.அய். விசாரணை நடத்தி உள்ளது. இது, நமது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment