மயக்க பிஸ்கெட்டுகளுக்கு ஏமாறவிடக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

மயக்க பிஸ்கெட்டுகளுக்கு ஏமாறவிடக் கூடாது

 தி.மு.. கூட்டணி வெற்றி என்பது இந்த இனத்தின் மீட்சிக்கானது

தளபதி மு..ஸ்டாலின் பிறந்த நாள் 'நீதி அரங்கம்' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர்

சென்னை, பிப்.27- 'நீதி அரங்கம்' - நல்லதை எடுத்துரைப்போம், நாமே விடிய வைப்போம் எனும் தலைப்பில் தி.மு..  தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின்  பிறந்த நாள் விழா கருத்தரங்கம்  நேற்று (26.2.2021) மாலை சென்னை பாரிமுனை - ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்றது.

துறைமுகம் தொகுதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரங்கத்தில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் உரைகேட்க பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.

தி.மு.. பொதுக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் .தாயகம் கவி, பகுதி தி.மு.. பொறுப்பாளர்கள் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துறைமுகம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட தி.மு.. செயலாளர் பி.கே.சேகர்பாபு உரையாற்றினார்.

நீதியரசர்கள் ஜி.எம்.அக்பர் அலி, சி.டி.செல்வம் கருத்தரங்க உரையாற் றினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப் புரை ஆற்றினார்.

"தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,  கலைஞரின் வார்ப்படம்தான் தளபதி மு..ஸ்டாலின். அவருடைய பிறந்த நாளில் நீதி அரங்கத்தில் Ôநல்லதை எடுத்துரைப்போம், நாமே விடிய வைப்போம்Õ என்று கூறப் பட்டுள்ளது. இது அலங்காரத்துக்காக அல்ல.

ஏன் ஆட்சி மாற்றம் தேவை? இன்று அனைவருமே நீதி கேட் கிறார்கள். பெண்கள், குடும்பத்தினர் நீதி கேட்கிறார்கள்.  பெண் எஸ்.பி. நீதி கேட்கிறார்.

"அடுப்பூதும் பெண்ணுக்கு படிப் பெதற்கு?" என்றார்கள், திராவிட இயக் கம் ஆட்சிக்கு வந்தபின்னர்தான் பெண்கள் கல்வி உரிமை பெற்று,  பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக வந்துள்ளார்கள்.

பெண்புத்தி பின்புத்தி அல்ல, முன்புத்திதான். இது பெரியார் மண். சமூகநீதி மண் இந்த மண். தளபதி மு..ஸ்டாலின் பிறந்த நாளில் விடியல் வரவேண்டும்.

ஏப்ரல் 6 அன்று நம் கடமை திமுக கூட்டணிக்கு நாம் வாக்களிப்பதுடன், அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். மயக்க பிஸ்கெட்டுகளுக்கு எவர் ஒருவரையும் ஏமாற விடக்கூடாது. தளபதிக்காக அல்ல. இந்த இனம் மீட்சி பெறவேண்டும் என்பதற்காக.

234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர், தளபதிதான் வேட்பாளர். யார் வேட்பாளர், எந்த சின்னம் என்பதைவிட திமுக கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தவேண்டும். திமுக அணி தான் பிணி போக்கும் அணி" என்று தமிழர் தலைவர் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

கொள்கை விளக்க வகுப்பாக, திராவிட இயக்க வரலாற்றை, திராவிட இயக்க சாதனைகளையும், திமுக ஆட்சி அமையவேண்டியதன் அவ சியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து 'திராவிடம் வெல்லும்', திமுக கூட்ட ணியின் வெற்றி என்பது  ஆட்சி மீட் சிக்கு மட்டுமல்ல - இனத்தின் மீட்சிக்கே  என்று உறுதிபடக் கூறுவதாக தமிழர் தலைவரது சிறப்புரை அமைந்தது. முடிவில் 59-ஆவது வட்ட தி.மு.. செயலாளர் மே.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஙர் சி.அமர்சிங், மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை,  சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், தென்சென்னை இளை ஞரணி மகேந்திரன், சண்முகப்ரியன், தரமணி மஞ்சநாதன், உடுமலை வடி வேல் கலையரசன், திமுக மாவட்டத் தலைவர் ஏகப்பன், புனிதவதி எத்தி ராசன், ஆசாத் ஷேக் அப்துல்லா உள்பட திமுக பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment