மத்திய அமைச்சர்கள் முன்பாகவே மக்களை ஏமாற்றிய சாமியார் ராம்தேவ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 22, 2021

மத்திய அமைச்சர்கள் முன்பாகவே மக்களை ஏமாற்றிய சாமியார் ராம்தேவ்

புதுடில்லி, பிப்.22- பதஞ்சலி நிறுவனத்தின் கோரோநில் என்ற மருந்து உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள் ளதாக கூறிய செய்தி போலியானது என்று தெரிவந்துள்ளதை அடுத்து சாமியார் ராம்தேவ் மக்களை ஏமாற்றிய விவகாரம் வெளிவந்துள்ளது.

கரோனா தொற்று உலகை அச்சு றுத்தி வருகிறது.  இதையொட்டி கடந்த ஜூன் மாதம் கருப்புப் பண சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கரோனில் என்னும் ஒரு தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது.   அப்போது இந்த மருந்தின் அறிவியல் ஆதாரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.  மத்திய ஆயுஷ் அமைச்சகம் கரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மட்டும் தெரிவித்தது.

அதன் பிறகு அந்த மருந்து குறித்து எவ்வித தகவலும் இல்லை.  நேற்று டில்லியில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் அந்த மருந்தை அறிமுகம் செய்தது.   இந்த விழாவில் பதஞ்சலி நிறுவன அதி பர் சாமியார் ராம்தேவ், மத்திய அமைச் சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இந்த இயற்கை மருந்து குறித்து சாமியார் ராம்தேவ் உரையாற்றினார். அதில் அவர் கோரோநில் மருந்து கரோனா தொற்று உள்ளவர்களை 3 முதல் 7 நாட்களில் 100 சதவீதம் குணப் படுத்தும் எனவும் இதற்கு உலக சுகாதார மய்யம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச் சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  ஆனால் இந்த தகவல்கள் தவறானது என தற்போது தெரிய வந்துள்ளது.  அதாவது இந்த கோரோநில் மாத்திரையை உலக சுகாதார மய்யம் ஒப்புதல்  அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மய்ய அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப் பாடு பிரிவு, எங்களுக்கு ஆயுஷ் அமைச் சகத்திடம் இருந்து இது மருந்துப் பொருள் என உறுதி அளிக்கப்படும் சி பி பி மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிபிபியில் கரோனாவின் வழக்கமான மருந்துகளுடன் கூடுதலாக இதையும் நோயாளிகளுக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

எனவே இந்த கோரோநில், மருந்து தனியாக அளிப்பதால் கரோனா குண மடையும் என்பதற்கு எவ்வித ஒப்புதலோ அல்லது சான்றிதழோ உலக சுகாதார மய்யம் அளிக்கவில்லை என்பது தெளி வாகி உள்ளது.   மேலும் ஆயுஷ் அமைச் சகமும் இதை கரோனா மருந்துகளுடன் கூட்டு மருந்தாக அளிக்க மட்டுமே பரிந் துரை செய்துள்ளது என்பதும் குறிப் பிடத்தக்கதாகும்.  ஆனால் இதை மறைத்து உலக சுகாதார நிறுவனம் எங்கள் மருந்திற்கு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் முன்பே மக்களை பொய் சொல்லி ஏமாற்றி உள்ளார். இவரது பொய்க்கு மத்திய ஆயூஸ் அமைச்சரகமும் துணை சென்றுள்ளது, இதன் மூலம் பெருவாரியான மக்களை சாமியார் ராம்தேவ் ஏமாற்றியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment