சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 20, 2021

சமையல் எரிவாயு உருளைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

கண்காணிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை,பிப்.20- சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் முகமைகள் தொழிலாளிகளுக்கு உரிய கட்டணத்தை வழங்காமல் நுகர்வோரிடம் கூடுதலாக கட்ட ணம் வசூலிக்க நிர்பந்தப்படுத்து வதாக கூறி தொடரப்பட்ட வழக் கில் எண்ணெய் நிறுவனங்களை கண்காணிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு உருளைகள் மீது  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முகமைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை அண்ணனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், எரிவாயு உருளை டெலிவரி செய்வதற்காக எரிவாயு ஏஜென்சிக்களுக்கு டெலிவரி கட் டணம் வழங்கப்படும் நிலையில், இந்த தொகையை எரிவாயு உருளை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழ ங்காமல், ஏஜென்சிக்களே எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டி இருந் தார். மேலும், டெலிவரிக்காக நுகர் வோரிடம் கட்டணம் வசூலிக்கும் படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர் களுக்கு சீருடை, அடையாள அட் டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண் டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், எரிவாயு உருளை சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எரிவாயு உருளை டெலி வரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவ னங்களுக்கு அறிவுறுத்தி, இதுசம் பந்தமாக விதிகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment