கண்மூடும் பூனையின் மனநிலை!
* தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2279 பேருக்குக் கரோனா தொற்று - 14 பேர் உயிரிழப்பு.
>> ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு - ஏதோ கரோனாவே முழுவதும் ஒழிந்து விட்டது போன்ற மனப்பான்மை (Mindset) வெகுமக்களுக்கு இருக்கிறது.
கண்மூடும் பூனை பூலோகம் இருண்டு விட்டது என்று நினைத்ததாம்!
மூளைநல்லாதான் வேலை செய்கிறதோ!
* மணப்பாறை அ.தி.மு.க. வேட்பாளரின் பொக்லைன் ஓட்டுநர் வீட்டு வைக்கோல் போரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்.
>> மூளையின் ஆற்றலோ ஆற்றல்!
தேர்தல் அல்ல - யுத்தம்!
* சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிரான யுத்தம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு
>> பா.ஜ.க. என்றால் அது கொண்டிருக்கும் பிற்போக்கு மதவாதச் சிந்தனைக்கு எதிரான போர் என்று பொருள்.
இளமை - புதுமை!
* முதன்முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களின் கருத்து என்ற போர்வையில், இளமை - புதுமை என்ற தலைப்பில் இளைஞர்களின் கருத்துகளை வாங்கி வெளியிட்டுள்ளது ‘இந்து தமிழ்திசை.'
>> புதிய வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒன்றைத் திணிப்பதுதான் இந்தக் கூட்டத்தின் உள்நோக்கம்.
பலே, பலே!
* அமெரிக்காவில் முதன்முதலாக திருநங்கையான டாக்டர் ரேச்சல் லெவின் துணை சுகாதார அமைச்சராக நியமனம்.
>> முதலாளித்துவ நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் இது நடந்திருக்கிறது - இந்தியா கண் திறக்கட்டும்!
கப்பல் கவிழப் போகிறது
* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்.
- பியூஷ் கோயல் உறுதி
>> தற்கொலைக்கு ஒப்பந்தம்.
சங்கிகளின் காதில் விழுந்து விடப் போகிறது - எச்சரிக்கை!
* நிலவில் விவசாயம் செய்ய உதவும் பாக்டீரியாவினைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி சயீத் அஜ்மல்கான் பெயரை சூட்டியது அமெரிக்காவின் நாசா.
>> வெளிச்சத்துக்கு வராத விஞ்ஞானியின் பெயர் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment