குடந்தை, மார்ச் 28- குடந்தை கழக மாவட்டம், சோழபுரம் நகர திராவிடர்கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களை ஆதரித்து திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 28-03-2021, ஞாயிற்றுக்கிழமை கிழமை, இன்று மாலை 6.00 மணியளவில் சோழபுரம் கடைவீதியில் குடந்தை ஒன்றிய தலைவர் த.ஜில்ராஜ் தலைமையில் தலைமை கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன், குடந்தை மாவட்ட து.செயலாளர் ஆ.தமிழ்மணி,மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் மு.திரிபுரசுந்தரி, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம், பெருநகர செயலாளர் பீ.இரமேஷ் ,மாவட்ட இளைஞரணி தலைவர்/பொதுக்குழு உறுப்பினர் க. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்க உள்ளனர்.வரவேற்புரை சோழபுரம் நகர தலைவர் ரவிச்சந்திரன், நன்றியுரை சோழபுரம் நகர செயலாளர் அ.மதியழகன் .
No comments:
Post a Comment