திருப்பதி: தலைமுடி கடத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

திருப்பதி: தலைமுடி கடத்தல்

 திருப்பதி, மார்ச் 31- திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடனாக தலைமுடியை பக் தர்கள் செலுத்தி வருகின்ற னர். இவ்வாறு தலைமுடிக் காணிக்கை என்று செலுத் தப்பட்ட பின்னர், அவை தரம் பிரிக்கப்படும். 25 முதல் 27 அங்குல நீளம் உள்ள தலைமுடி முதல் வகையை சேர்ந்தது, அதன் பின்னர், 18 முதல் 24 அங்குலம் தலைமுடி 2ஆம் வகையை சேர்ந்தது என்றவாறு காணிக்கை தலை முடிகள் 6 பிரிவுகளாக பிரிக் கப்பட்டு, அவை நன்றாக அலசி, உலர வைத்து, அதன் பின்னர் அவை சுத்தப்படுத்தி பாதுகாக்கப்படுமாம்.

இந்த தலைமுடிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை -டெண்டர் மூலம் ஏலம் விடப் படுகிறது. இவற்றை ஏலம் எடுக்க வெளிநாட்டவர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகவே ஒரு கும்பல் அவர்களாகவே ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு ஏலத் தில் பங்கேற்பதாகவும் குற்றச் சாட்டுகள் நிலவுகின்றன. ஆதலால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று அவர்கள் கூறும் விலைக்கு தலைமுடி ஏலம் விடப்படுகிறது. இவை சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப் படுகிறது.

கடந்த 10 நாள்களுக்கு முன்னர் மிசோரம் அருகே சீன எல்லையில் வாகனங் களை அசாம் ஆயுதப் படையினர் தணிக்கை செய்தனர். அப்போது, ஒரு சரக்கு லாரி யில் 120 தலைமுடி மூட்டை கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இது குறித்து விசாரணை நடத்தியதில், இவை அனைத் தும் திருப்பதி ஏழுமலையா னுக்கு பக்தர்கள் காணிக்கை யாக வழங்கியவை எனத் தெரியவந்தது. ஆனால், இவை ஏன் வெளிநாட்டுக்கு கடத் தப்பட வேண்டும்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற சந்தேகம் அனை வருக்கும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர் பாக தெலுங்கு தேசம் கட்சி யின் மூத்த நிர்வாகியான அய் யண்ண பாத்ருடு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சமூக வலைதளத்தில் விமர் சித்துள்ளார். ‘கடைசியில் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை முடி களை கூட ஜெகன் கட்சியினர் விட்டு வைக்கவில்லைஎன அவர் விமர்சித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ் தானம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"பல கோயில்களைப் போன்றே திருப்பதி தேவஸ் தானமும் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை -ஏலம் மூலம் வெளி நாட்ட வர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால், இவை சீன எல்லையில் கடத்தப்படும் போது பிடிபட்டது என செய்திகள் வெளி வருகின்றன. இதற்கும், தேவஸ்தானத்திற் கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எந்த நிறுவனம் இது போன்ற செயலை செய்தார் கள் எனும் விவரத்தை வெளியிட்டால் அந்த நிறுவனத்தார் இனி -ஏலத்தில் பங்கேற்கா தவாறு நடவடிக்கை எடுப்போம்" என அதில் தேவஸ் தானம் சப்பைக்கட்டுக் கூறியுள்ளது.

No comments:

Post a Comment