சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 30, 2021

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்பு

எகிப்து, மார்ச் 30-  அய்ரோப் பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.

23.3.2021 அன்று 20 ஆயிரம் டன் பெட்டகங் களுடன் சென்ற ஜப்பானின்எவர்கிரீன்என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்த கப்பல் கால்வாய் முழு வதையும் அடைத்துக் கொள் ளும் வகையில் திரும்பி நின்ற தால் சூயஸ் கால்வாயில் கப் பல் போக்கு வரத்து முழுமை யாக தடைபட்டது.

உலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடை பெறுகிறது. இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணெய், கால் நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக் கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இந்த கப்பல் சூயஸ் கால் வாயில் சிக்கிக் கொண்டதால்ஆசிய நாடுகளுக்கும் அய் ரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இத னால் செயற்கைக்கோள் மூலம் கப்பல் நிற்கும் இடம் தரை தட்டியவிதம் ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப் பட்டன. கப்பல் தரைதட்டி நின்ற கால்வாயின் ஆழமான பகுதியில் உள்ள மண் அகற் றும் பணி நடந்தது.

மீட்புக் குழுவினர், அந்த கப்பலை சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் திருப்பி மிதக்கவிடும் முயற்சியில் இறங் கினர். 14 இழுவை படகுகள் மூலம் தரை தட்டிய கப்பலை இழுத்தனர். இதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைத்தது.

ஒருவார கால போராட் டத்துக்கு பிறகு தீவிர முயற்சி காரணமாகஎவர்கிரீன்கப் பலின் தரை தட்டிய பாகம் அதிலிருந்து விடுபட்டது. இத னால் அந்த கப்பல் தரைதட் டிய இடத்தில் இருந்து மீண்டு மிதக்கத் தொடங்கியது.

சூயஸ் கால்வாய் ஆணை யத்தின் தலைவரான லெப் டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே, ‘நேற்று (29.3.2021) காலை இந்த கப்பல் மிதக்கத் தொடங்கி யதுஎன்று தெரிவித்தார். இதனால் ஒருவார போராட் டத்துக்கு பிறகு சூயஸ் கால்வாய் போக்குவரத் துக்கு வழிபிறந்துள்ளது என் பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment