ஏவுகணை சோதனை விவகாரம்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 29, 2021

ஏவுகணை சோதனை விவகாரம்:

அமெரிக்க அதிபர் பைடனுக்கு வடகொரியா கண்டனம்

பியாங்யாங், மார்ச் 29 வடகொரியா ஏறத்தாழ ஓராண்டுக்கு பிறகு 26.3.2021 அன்று முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.

 ஏவுகணை சோதனை நடத்தியதை உறுதி செய்த வடகொரியா அரசு இந்த 2 ஏவுகணைகளும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய வல்லமை படைத்தவை என்றும் சோதனையின்போது இவை 600 கிலோமீட்டர் பயணித்து இலக்கை அடைந்ததாகவும் தெரிவித்தது.

மேலும் இந்த 2 ஏவுகணை

களையும் புதிய ஆயுதங்கள் என வடகொரியா ராணுவம் குறிப் பிட்டுள்ளது.

இந்தநிலையில் ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரி யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அதிபர் ஜோ பைடனிடம் வட கொரியா ஏவுகணை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜோ பைடன் பதிலளிக்கையில் வடகொரியாவின் நடவடிக்கை அய்.நா. தீர்மானங்களை மீறுவதாகும்.

இதுகுறித்து அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். அவர்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வழியை தேர்வு செய்தால் அதற்கு ஏற்ப நாங்கள் பதிலளிப்போம்.

விளைவுகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் நான் ஒரு சமரசத்துக்கும்தயாராக

இருக்கிறேன்.

அது அணுசக்தி மயமாக்கலின் இறுதி முடிவில் நிபந்தனை செய்யப்பட வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், ஏவுகணை சோதனையை விமர்சித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை சோத னைகள் குறித்து   பைடன் தெரிவித்துள்ள கருத்து, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் வட கொரியா சாடியுள்ளது.

No comments:

Post a Comment