கனடா பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.க. ரூ. 10 லட்சம் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 27, 2021

கனடா பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.க. ரூ. 10 லட்சம் நிதி

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,ஏப்.27- கனடா நாட் டில் உள்ள டோரொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தி.மு.. சார்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் எனறு அக்கட்சியின் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஏப்26) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அன்னைத் தமிழ்மொழிக்கு உல கெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் 'தமிழ் இருக்கை' அமைக்கப்பட்டு, ஆங்காங்கு வாழும் தமிழர்கள் மொழித் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சீரிய முயற்சிக்கு தி.மு.. தொடர்ந்து நிதியுதவி அளித்து, தமிழ்மொழியின் புகழும் பெருமையும் உலகெங்கும் பரவிடத் தொய் வின்றி பணியாற்றி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள டோரொன்டோ பல்கலைக் கழ கத்தில் தமிழ் இருக்கை உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கனடாவாழ் தமிழர்களும் உல கெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு திமுக சார்பில் நிதியுதவி தந்திட வேண்டுமென்றும் கனடியத் தமிழர் பேரவை நிறை வேற்று இயக்குநர் டன்ரன் துரை ராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் மொழிச் சிறப்புக்கும் என்றென்றும் ஆக்கப் பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் தி.மு.. சார்பில், கனடா டோரொன்டோ பல்கலைக் கழகத்தில் அமையவி ருக்கும் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும். இளைஞர்களின் தாய் மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும்.

இவ்வாறு தளபதி மு..ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment