இந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 28, 2021

இந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு

 ஜெனிவா, ஏப்.28 இந்தியாவில் காணப் படும் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது.

இந்தியாவில் இந்த புயல்வேக கரோனா வைரஸ் பரவலுக்கு இந்தி யாவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் (பி.1.617) காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 இந்த நிலையில், இந்தியாவில்  பரவிய புதிய வகை கரோனா வைரஸ் 17-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண் டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கரோனா பாதிப்பு சராசரியாக 3.50 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.  

No comments:

Post a Comment