'காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்!'
* கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200
>> வியாபாரிகள் என்ன தர்ம பிரபுவா?
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
* தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு அளிக்காதோர் 1.70 கோடி.
>> இவர்கள் வெறும் விமர்சனவாதிகள் - அவ்வளவே!
அவசரம் எதற்கு அழிவுக்கா?
* மத்திய பா.ஜ.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளில் 76 அவசர சட்டங்கள்.
>> அவசர கதியில் ஜனநாயகம் அழிந்து வருகிறது.
கொட்டினால்தான் தேள்!
* தேசியக் கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு
>> தமிழர்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சூடான அய்ஸ்சோ?
* மதுரை கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்குகிறார் அழகர்
>> பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்க அடிகள் சும்மாவா சொன்னார்?
No comments:
Post a Comment