தி.மு.க.வா இந்து மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்தது?
தி.மு.க.வா தமிழ் நீஷ பாசை என்று சொன்னது?
தி.மு.க.வா கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் ஓதியது?
தி.மு.க.வா தமிழில் தேவாரம் பாடிய ஓது வார்களை கோவிலுக்குள் வைத்து தாக்கியது?
தி.மு.க.வா தீண்டாமையைக் கடைப்பிடிக்கச் சொன்னது?
தி.மு.க.வா தீண்டாமையைக் கடைப் பிடிக்காதே என்று சொன்ன இராமானுஜரை உயிருக்குப் பயந்து மைசூருக்கு விரட்டியடித் தது?
தி.மு.க.வா முடிசூடும் பெருமாள் என உயர் தொனியில் பெயர் இருப்பதால், முத்துக்குட்டி என மாற்று என்று அய்யா வைகுண்டரை பெயர் மாற்றச் சொன்னது, அதற்காக சிறையில் அடைத்தது?
தி.மு.க.வா வள்ளலாரை வைதீக வெறிக்கு எதிராகப் பேச வைத்தது?
தி.மு.க.வா உங்கள் சாஸ்திரங்களை குப்பை யில் தூக்கி வீசுங்கள் என்று சுவாமி விவேகா னந்தரை சொல்லச் சொன்னது?
தி.மு.க.வா நாமம் போடும் வைணவரை திருநீறு பூசக்கூடாது என்று சொன்னது?
தி.மு.க.வா திருநீறு பூசும் சைவரை நாமம் போடாதே என்று சொன்னது?
தி.மு.க.வா சிறீரங்கம் கோவில் யானைக்கு (Y) நாமம் போடுவதா? (U) நாமம் போடுவதா என வழக்கு நடத்தியது?
தி.மு.க.வா இந்து மக்களை கோவில் கருவறைக்குள் விடாமல் தடுத்தது?
தி.மு.க.வா அனைவரும் அர்ச்சகராகக் கூடாது எனத் தடுத்தது?
தி.மு.க.வா இட ஒதுக்கீட்டை தடுக்க முயல் கிறது?
தி.மு.க.வா மண்டல் ஆணையத்துக்கு எதிராக ரதயாத்திரை நடத்தியது?
தி.மு.க.வா குப்புசாமியை குப்பா என்றும் , மாடசாமியை மாடா என்றும் ஒருமையில் அழைத்தது?
தி.மு.க.வா மருத்துவம் படிக்க விடாமல்,
2017- அரியலூர் அனிதா
2018- திருச்சி சுபசிறீ
2018- விழுப்புரம் பிரதிபா
2019- தஞ்சை வைஷ்யா
2019- திருப்பூர் ரிதுசிறீ
2019- விழுப்புரம் மோனிஷா
2020- கோவை சுபசிறீ
2020- மதுரை ஜோதிசிறீ துர்கா
2020- அரியலூர் விக்னேஷ்
2020- தர்மபுரி ஆதித்யா
2020- திருச்செங்கோடு மோதிலால் ஆகிய இந்து மாணவ-மாணவிகளைக் கொன்றது?
இதையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களாக செய்துவிட்டு,
இதை சரிசெய்ய முயன்ற தி.மு.க.வை இந்துக் களின் எதிரி என்கிறார்கள். தி.மு.க. இந்துக்க ளுக்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் நண் பன் தான்.
இந்துக்களின் எதிரி சங்கிகள் தான். இந்துத்வா தான்.
இந்து வேறு
இந்துத்வா வேறு.
இரண்டுக்கும் ஒரே வேறுபாடு தான். நரேந் திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோரைக் கொலை செய்தது இந்துத்துவா சித்தாந்தம் தான்.
No comments:
Post a Comment