சென்னை, மே 13 சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கில் நேற்று (12.5.2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், தொழில் துறைச் செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில்
18 முதல் 45 வயதுஉடையவர்களுக்கு செலுத்துவதற்கான கரோனா தடுப்பூசியை உலக ளாவிய ஒப்பந்தம் மூலம் தமிழக அரசே கொள்முதல் செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில்
கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பு ஊசியும், கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த மே 1ஆம் தேதியில் இருந்து 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
தடுப்பூசி
போதிய அளவில் ஒதுக்கப்படாத நிலையில், இத்திட்டம்தமிழகத்தில் தொடங்கப்பட வில்லை. அதேநேரம் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்வர்
தலைமையில் ஆய்வு
இந்நிலையில்
நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்துக்குப் பின்பு, அங்குள்ள முதல்வருக்கான அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,
வருவாய்த் துறைஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதித்
துறைஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார்.
அதில்
தலைமைச் செயலர்வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், தொழில்துறைச்
செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத்
துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும்
பங் கேற்றனர். இதில்,
கரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் விநியோகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
13 லட்சம்
தடுப்பூசிகள் ஒதுக்கீடு
கரோனா
தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத் துக்கு 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மகிழ்ச்சியான
செய்தி
இன்னும்
இரண்டு நாளில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளன.
இந்த
ஒதுக்கீடு 18 முதல் 45 வயது வரையுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம்தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்துக்குள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடு வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும். மேலும், தமிழகத்தில் ஆக்சி ஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது மாநிலத்துக் கான மத்திய அர சின் ஒதுக்கீடு
குறைவாகவே உள்ளது. இந்த அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர்
வேண்டுகோள் விடுத்தார்.
கூடுதல்
ஆக்சிஜன் தேவை
அந்த
வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சி ஜன் ஒதுக்கீடு, 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த் தப்பட்டுள்ளது. இருந்தபோதி லும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது.
எனவே,போதிய ஆக்சி ஜன் உற்பத்தி அலகு களை தமிழகத்தில் உடனடியாக அமைக்கவும், பிற மாநிலங் களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டுவரவும், அவ்வாறு பெறப்படும் ஆக் சிஜனை தேவைப்படும் மருத் துவமனைகளுக்கு சீராக விநி யோகிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் உடனடியாக எடுக்கும்படி தொழில் துறைக்கும், மருத் துவத்துறைக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் உத்தர விட்டார்.

No comments:
Post a Comment